உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள அவுராய் நகரில் துர்கா பூஜை நடந்தது. இந்த பூஜையில் 150 பேருக்கும் மேல் கலந்துக்கொண்டு வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில், இரவு 9 மணியளவில் ஆரத்தி காண்பிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், 52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 52 பேரில் 22 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக (பிஎச்யு) அவசர சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், "ஆரத்தி நேரத்தில் இரவு 9 மணியளவில் பதோஹியில் உள்ள துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது. 10-15 பேர் பலத்த, அதாவது 30-40 சதவீதம் தீக்காயமடைந்திருக்கின்றனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது. விசாரணை நடந்து வருகிறது. இப்போது, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே எங்கள் முன்னுரிமை. வாரணாசியில் உள்ள மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/MlZtevk
0 Comments