எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது வெடித்து, தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை பார்த்திருக்கிறோம். குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் பேட்டரிகள் தான் அதிகமாக வெடித்து சிதறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அமெரிக்காவிலும் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், ஆங்காங்கே எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியத்தான் செய்கிறது.
மும்பையிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மும்பை அருகில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசிக்கும் ஷாநவாஸ் அன்சாரி என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். அன்சாரி வழக்கமாக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை கழற்றி எடுத்து வந்து வீட்டின் முன் அறையில் வைத்து சார்ஜ் செய்வது வழக்கம். அதேபோல் அன்சாரி தனது வீட்டில் இரவில் பேட்டரியை தனியாக கழற்றி எடுத்து வந்து சார்ஜ் செய்ய வைத்திருந்தார். சார்ஜில் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் அன்சாரியின் தாயாரும், 7 வயது வயது மகனும் உறங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்அதிகாலை 5 மணிக்கு திடீரென பேட்டரி வெடித்து சிதறியது.
இதில் அன்சாரியின் மகன் சபீர் படுகாயம் அடைந்தான். வீட்டின் முன் அறையும் பலத்த சேதம் அடைந்தது. சிறுவன் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அவன் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனான். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொதுவாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரிகளுக்கு 3 முதல் 4 மணி நேரம் சார்ஜ் செய்யவேண்டும். ஆனால் அதிகப்படியான நேரம் சார்ஜ் செய்யப்படும் போது சூடு அதிகமாகி வெடித்துவிடக்கூடிய அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/FpEycH9
0 Comments