நகை திருடியதாகச் சந்தேகம்; பட்டியலினச் சிறுவனை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தவர்கள்மீது வழக்கு பதிவு!

கர்நாடக மாநிலத்தில் 14 வயது பட்டியலின சிறுவன் ஒருவனை சந்தேகத்தின்பேரில் மாற்றுச் சமூகத்தினர் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வியாழன் இரவன்று, சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் கெம்படேனஹள்ளி கிராமத்தில், காதணிகளைத் திருடியதாக பட்டியலின சிறுவன் ஒருவனை அந்தப் பகுதி மக்கள் சிலர் இரக்கமின்றி கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர்.

பட்டியலின சிறுவன்மீது தாக்குதல்

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவனின் தயார், இது பற்றி போலீஸிடம் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``சில தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகத்தின்பேரில் சிலரால் என்னுடைய மகன் வெளியே இழுத்துச் செல்லப்பட்டான். பின்னர் அவர்கள் என் மகனை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி தாக்கினர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின்மேல் நடவடிக்கை எடுத்த போலீஸார், 1989-ம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் அதிகாரியொருவர், பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/lGaei9I

Post a Comment

0 Comments