மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து, நேற்றிரவு குஜராத்தின் கோரக்பூர் நோக்கி தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிச் சென்றிருக்கிறது. அப்போது, சுஹாகி பஹாரி அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பயணிகள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 20 பேர் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரியொருவர், "கோரக்பூர் நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநில மக்கள். அவர்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்கள். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்" எனத் தெரிவித்தார்.
எதிர்ப்பாராத விதமாக நிகழ்ந்த இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, ``நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த பேருந்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி, "மத்திய பிரதேச முதல்வரிடம் காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை பற்றி பேசி இருக்கிறேன். உடல்களை குஜராத் கொண்டுவருவது பற்றியும் பேசியிருக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ.50 வழங்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Ofbypq3
0 Comments