நீலகிரி: காரில் கடத்தல்; ஆட்டோவில் சப்ளை - 1,000 பாக்கெட் குட்காவுடன் சிக்கிய நபர்! நடந்தது என்ன?!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நீலகிரி வழியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. நீலகிரியிலும் குட்கா புழக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஆட்டோ மூலம் குட்கா பொருட்களை சப்ளை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் குட்கா பொருட்களை மொத்த விலையில் விற்பனை செய்து வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட குட்கா

குட்கா பறிமுதல் குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், "ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம். நபர் ஒருவர் ஆட்டோவில் மூட்டைகளை வைத்து கொண்டு கடைகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார். சந்தேகத்திற்குரிய அந்த ஆட்டோவை சுற்றி வளைத்தோம். உள்ளே இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. கூடலூர் வேடன்வயலைச் சேர்ந்த 40 வயதான தேவராஜ், கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்து ஆட்டோ மூலம் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 1,145 குட்கா பாக்கெட்டுகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஆட்டோ போன்றவற்றை பறிமுதல் செய்தோம். வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/uqr4UvE

Post a Comment

0 Comments