``ஜிஎஸ்டிக்கு பின் மாநில அரசுகளின் நிதிச்சுமை அதிகரிப்பு” - அமித் ஷா தலைமையிலான கூட்டத்தில் ஸ்டாலின்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் கலந்து கொண்டு தங்களின் மாநிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் மீது சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்கும் காலத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை பேணுவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தேவை. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்து தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும்'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/0jvJ5lB

Post a Comment

0 Comments