கர்நாடக தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெங்களூர் நகரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
This is Bengaluru and it is supposed to happen every rainy season !!
— John▫️ (@Johnthanpui_) September 6, 2022
I don't think so. It's another way of punishment to its taxpayers and citizens of the state. You can see corruption through this flood.
Location: Yemlur near HAL pic.twitter.com/K4YRl0wRxY
ஏமலூர் பகுதியில் உள்ள பல குடியிருப்புகளின் வீடுகள் மட்டுமின்றி வாகன நிறுத்துமிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். சில பகுதிகளில் சிக்கித் தவித்த பொதுமக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
How can you identify a corruption being done by politicians?
— John▫️ (@Johnthanpui_) September 6, 2022
You can see one of the answer how to identify one of it. Every rainy season will show how corrupt politicians ignore the land and its citizens after election.#BengaluruRain #BJPDrownsBengaluru #Corruption pic.twitter.com/KNtr13WWrS
வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கனமழையால் கர்நாடக தலைநகரான பெங்களூரின் விமான நிலையமும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ஏராளமான பயணிகள், சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதால், ட்ராக்டர்களை எடுத்துக்கொண்டு தங்கள் நகருக்குச் செல்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/2sdKr1O

0 Comments