கர்நாடகாவில் உள்ள ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம், முக்கிய செல்வாக்கு மிக்க லிங்காய மடம். பல அரசியல் தலைவர்களும் இந்த மடத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், வித்யாபீடத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் வசித்த இரண்டு மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சி. சந்திரகுமார் என்பவர் இந்தப் புகாரைத் தொடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மடாதிபதி தரப்பில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சித்ரதுர்கா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை நடைபெற்றதில் இந்த வழக்கில் தொடர்புடைய மடத்தின் அதிகாரி பசவராஜன், அவரின் மனைவி சவுபாக்யா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு குறித்த விசாரணை இன்று நடைபெறும் என நீதிபதி அறிவித்திருந்த நிலையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது.
மேலும், ஒருவாரமாக என்ன விசாரணை நடைபெற்றிருக்கிறது? என்பது குறித்த விளக்கம் அளிக்க மாநில மகளிர் ஆணையமும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் காவல் அதிகாரி பரசுராமுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, நேற்று இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்துக்கொண்டிருந்த நிலையில், மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், மடம் இருக்கும் பகுதிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க காவல்துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/8cgEioJ
0 Comments