பஞ்சாப் சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவிகள் பொது குளியலறையில் குளிக்கும்போது சக மாணவி ஒருவர் வீடியோ பதிவுசெய்ய, அது இணையத்தில் வெளியாகி சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ராணுவ வீரர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரிலுள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் சிறுமிகளை வீடியோ பதிவுசெய்த தூய்மைப் பணியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் கூடுதல் எஸ்.பி ஒருவருக்குச் சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கி மருத்துவ தேர்வுக்கு படிக்கின்றனர்.
இந்த நிலையில், அந்த விடுதியில் தூய்மைப் பணியாளராக இருக்கும் ஒருவர், விடுதிப் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்திருக்கிறார். எதேச்சையாக அதைக் கவனித்த சிறுமி ஒருவர், அவரது செல்போனை பறித்துச் சென்று சோதித்ததில், பல விடுதிச் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் அதில் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்று இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். மாணவிகள் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து அந்த நபர் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரிடம் அந்த நபரின் செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/EfeAOiG
0 Comments