மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், போபாலைச் சேர்ந்த 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் தங்கள் உத்தியோகபூர்வ தேவைக்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், நள்ளிரவில் கண்விழித்தபோது யாரோ ஒருவர் அவர்களுடன் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து பதறி சத்தமிட்டிருக்கிறார்கள்.
உடனே அந்த நபர் அறைக் கதவை பூட்டிவிட்டு வெளியே ஓடிவிட்டார். அதையடுத்து இரண்டு பெண்களில் ஒருவர் காவல்துறைக்குத் தகவலளித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உள்ளே யார் சென்றது என்பதை அறிய ஹோட்டல் ஊழியர்களை வரிசையாக நிற்கவைத்து அந்தப் பெண்களை அடையாளம் காணக் கேட்டிருக்கிறார்கள். அப்போது தங்களுடன் படுக்கையறையில் அத்துமீறி தூங்கிய நபர் அங்கு வரிசையில் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், போலீஸாரிடம் அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து, அந்த நபரைக் கைதுசெய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக காவல்துறை தரப்பு, ``தனியார் துறையில் வேலை செய்யும் இரண்டு பெண்கள் ஹோட்டலில் தங்கியிருப்பதை ஹோட்டல் ஊழியர் பலிராம் (22) கவனித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, ஜன்னல் கண்ணாடி வழியாக அவர்களது அறையில் நுழைந்திருக்கிறார். அவர்களிடம் பாலியல்ரீதியில் அத்துமீறுவதற்குள் அந்த நபர் பிடிபட்டிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்மீது ஐபிசி பிரிவு 354, 458-ன் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறி நுழைந்ததற்கான வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/qjg6hP1
0 Comments