கடவுள் சிவன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் - `சிவனுக்கு' நடுநாயகமாக இருக்கை அமைத்த ம.பி முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் மிகவும் பிரபலமாகும். இந்தக் கோயிலைச் சுற்றி மாநில அரசு ரூ.851 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டப்பணிகள் ரூ.351 கோடி செலவில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரும் அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. கோயிலைச் சுற்றி 900 மீட்டர் தூரத்துக்கு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது குறித்து ஆலோசிப்பதற்காக முதன்முறையாக உஜ்ஜைனியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழக்கமாக முதன்முறையாக `மகாகாலேஷ்வர்' படம் வைக்கப்பட்டு, அவருக்கு தனி இருக்கையும் போடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ``இது மகாகால் அரசு. இங்கு அவர்தான் மன்னர். மகாகாலேஷ்வரின் மண்ணில் கூட்டம் நடத்தவே அவர் ஊழியர்கள் இங்கு வந்திருக்கிறோம்.

அமைச்சரவைக் கூட்டம்

200 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். மகாகாலேஷ்வரை உஜ்ஜைன் நகர மக்கள் தங்கள் மன்னராகவே நம்புகின்றனர். 351 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பகுதிக்கு `மகாகால் லோக்' என்று பெயரிடப்படும் என்றும், அக்டோபர் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும் முதல்வர் சவுகான் தெரிவித்தார். ஆரம்பத்தில் இந்தத் திட்டம் ரூபாய் 95 கோடியில் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. பின்னர் இது 856 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடையும்போது காசி விஷ்வநாத் கோயிலைவிட நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/iVnozq0

Post a Comment

0 Comments