​முல்லை பெரியாறு அணையை இடிக்க கேரளாவில் ​தீர்மானம்; தமிழக விவசாயிகள் கண்டனம்!

​முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசியல்வாதிகள், தனியார் அமைப்புகள் தொடர்ந்து விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ​மேலும் முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பல்வேறு நிபுணர் குழுக்களாலும், உச்சநீதிமன்றத்தாலும் உறுதிசெய்யப்பட்ட பிறகும் அணை பலவீனமாக உள்ளதாகவும், அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்களையும் நடந்தி வருகின்றனர். 

முல்லைப்பெரியாறு அணை

​இடுக்கி மாவட்ட​ம் தொடுபுழா அருகே​​​​​ உள்ள பழமையான பஞ்சாயத்​து வெள்ளியமட்ட​ம். இந்தப் பஞ்சாய​​த்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு அதற்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தை​ ​பஞ்சாயத்து தலைவரான இந்து பிஜு முன்மொழிந்திருக்கிறார்.​ ​சுயேச்சைகள் ஆதிக்கம் செலுத்தும் 15 வார்டுகளைக் கொண்ட வெள்ளிய மட்டம் பஞ்சாயத்தில், ஏக மனதாக ​இந்தத்​தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.​ ​இதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து ​பெரியாறு வைகை பாசன​​​ விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ''எலமதேசம்,​ ​எலமதேசம் கிழக்கு,​​ எலமதேசம் தோட்டம்,​ ​பன்னி மட்டம்,​ ​குருவகாயம்,​ ​மெத்தோப்பு,​ ​பூமலை, ​ ​வகண்ட​​ம், கோழிப்பண்ணி,​ ​கோலப்ரம்,​ ​பூச்சபுரா, வெளிய மட்டம், கருக்காப்பள்ளி, ​​வெட்டி மட்டம்,​ ​நிஜலம்புரா உள்ளிட்ட 15 பகுதிகளை உள்ளடக்கிய வெள்ளியமட்டம் பஞ்சாயத்தில்​ 8 சுயேச்சைகளும், இரண்டு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், பா​.​ஜ​.​க​ ​மற்றும் கேரள காங்கிரஸ் (மாணி பிரிவு) தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றியுள்ள நிலையில்​ இந்த தீர்மானத்தை ஏக மனதாக வழிமொழிந்து இருக்கிறார்கள்.

அன்வர் பாலசிங்கம்

​கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவரான, வழக்கறிஞர் ரசல் ஜோய், கேரளாவில் உள்ள இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும்,​ ​முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாறு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்து பிஜு

​அவரது வேண்டுகோளை ஏற்றுத்தான், வெள்ளியமட்டம் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக இந்த பஞ்சாயத்தின் தலைவர் இந்து பிஜு கூறி இருக்கிறார்.​ ​விஷ விதைகளை, கேரளா முழுவதும் தூவி வந்த இந்த ரசல் நோய், தற்போது பஞ்சாயத்துக்களிலும் ஊடுருவி இருப்பது மிகவும் ஆபத்தானது.​ ​இதே நிலை நீடிக்குமானால், நாங்களும் களத்தில் இறங்கி​ ​தேனி​,​ திண்டுக்கல்​,​ மதுரை​,​ சிவகங்கை​,​ ராமநாதபுரம்​,​ விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும்​ ​​கேரளாவோடு சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றுமாறு கடிதம் அனுப்புவோம்​ ''என்றார். ​



from தேசிய செய்திகள் https://ift.tt/Ak70OFw

Post a Comment

0 Comments