`நீங்கள் இறந்துவிட்டீர்கள்... உங்களுக்குப் பணமில்லை': உயிரோடு இருப்பதை நிரூபிக்கப்போராடும் முதியவர்!

பெரும்பாலான முதியவர்களுக்கு அரசு உதவித்தொகைதான் கடைசி காலத்தில் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதியவர் ஒருவர் வங்கியில் சென்று அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகையைக் கேட்டதற்கு, `நீங்கள் இறந்துவிட்டீர்கள்; உங்களுக்குப் பணம் தர முடியாது’ என மறுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுமை -சித்தரிப்பு படம்

உத்தரப்பிரதேசம், ஷாஜகான்பூர் மாவட்டம், தில்ஹர் தாலுகாவைச் சேர்ந்தவர், ஓம் பிரகாஷ். 70 வயதான இவர், வங்கிக்குச் சென்று தன்னுடைய முதியோர் பணத்தைக் கேட்டுள்ளார். வங்கியிலிருந்தவர்களோ, அரசு ஆவணங்களின்படி இவர் இறந்துவிட்டதாகக்கூறி, உதவித்தொகையை வழங்க மறுத்துள்ளனர். தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க, சுமார் ஒரு வருடமாக அந்த முதியவர் போராடி வருகிறார்.

``அரசு ஆவணங்களின்படி நான் இறந்துவிட்டேன் என உள்ளது. இதனால் வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை. பணமில்லாததால் நீர் பாய்ச்ச முடியாமல், என்னுடைய கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது யாரும் எனக்கு உதவுவதில்லை” என்று வருத்தத்துடன் அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.

ageing

இதை அறிந்த தில்ஹர் தாசில்தார் ஞானேந்திர சிங், ``இது குறித்து முதியவரின் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்த, குழு ஒன்று அனுப்பப்படும். பதிவேட்டில் அவர் இறந்துவிட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தால், அந்த ஆவணம் சரி செய்யப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3trswaE

Post a Comment

0 Comments