ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயதான துளசி பிரசாத். இவர் ஹைதராபாதில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் மதனப்பள்ளி சந்திரா காலனியைச் சேர்ந்த 26 வயது சிரிஷா என்ற பெண்ணும் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்தோடு செப்டம்பர் 12-ம் தேதி திங்கள் கிழமையன்று திருமணம் முடித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று குடும்பத்தினர் முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்து, தம்பதியரை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அந்த இரவு துயரமானதாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை. முதலிரவு அறையில் எதிர்பாராதவிதமாக துளசி பிரசாத் சுயநினைவை இழந்து வீழ்ந்துள்ளார். பதறிப்போன சிரிஷா, குடும்பத்தினரை உதவிக்கு அழைக்க, உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மணமகனின் இறப்பால் குடும்பத்தினரும், மணப்பெண்ணும் மீள முடியா சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் இது குறித்துத் தெரிவிக்கையில், ``முதலிரவு அன்று மணமகன் இறந்ததாகக் கூறப்படுகிறது. வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்'' எனத் தெரிவித்துள்ளனர்.
தகவல்களின்படி, துளசி ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதலிரவில் மாரடைப்பால் மணமகன் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/runVcBX
0 Comments