பாக்கி ரூ.500-ஐ தர மறுத்த மனைவி; தற்கொலை செய்யப்போவதாக நாடகமாடிய கணவனுக்கு நேர்ந்த சோகம்!

கணவன் மனைவி சண்டையில் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய கணவர் மும்பையில் பரிதாபமாக உயிரிழந்தார். மும்பை அருகில் உள்ள விராரில் வசித்தவர் பகவான் ராம்ஜி. தனியார் துணி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி சாந்தினிதேவி. பகவான் தன் மனைவியிடம் ரூ.2 ஆயிரம் கொடுத்து ரூ.1,500-க்கு துணி எடுத்துக்கொண்டு பாக்கி பணம் ரூ.500-ஐ தன்னிடம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் மனைவி சொன்னபடி 500 ரூபாயை திரும்பக் கொடுக்கவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. மனைவியை மிரட்டுவதற்காக, ``500 ரூபாயை திரும்பக் கொடுக்கவில்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன்" என்று மிரட்டினார். ஆனால் அவர் மனைவி பயப்படவில்லை.

தற்கொலை

உடனே பகவான் துணி ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். அவர் நடிப்பதாக அவர் மனைவி நம்பினார். துணியை மின் விசிறியில் கட்டிய பகவான் மனைவியிடம் மிரட்டிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக துணி தூக்கில் சிக்கிக்கொண்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அறைக்குள் சென்றவர் நீண்ட நேரம் வெளியில் வராததால் அச்சமடைந்த சாந்தினி கதவை தட்டிப்பார்த்தார்.

மரணம்

ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களின் துணையோடு கதவை உடைத்துப் பார்த்தபோது உள்ளே மின்விசிறியில் தூக்கில் பகவான் தொங்கிக்கொண்டிருந்தார். அவரை இறக்கிப் பார்த்தபோது இறந்துகிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பகவான் மனைவியிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். நடந்த சம்பவம் குறித்து சாந்தினி போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/le7GN6r

Post a Comment

0 Comments