ம.பி: கட்டாயப்படுத்தி பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த சிறுமிகள்? - விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சார்

மத்தியப் பிரதேச மாநிலம், குணா மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவிகள் கழிவறையைச் சுத்தம் செய்வது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. இது தொடர்பாக மாநில அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா குணா மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவலின்படி, குணா மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கையில் துடைப்பத்தை வைத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறைகளைச் சுத்தம் செய்திருக்கின்றனர். சிறுமிகளை பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி இப்படி செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. மேலும், சம்பவம் நடந்த நாளன்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் மாணவிகள் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் புகைப்படங்கள்

ஆனால், பள்ளியில் கழிவறைகளைச் சுத்தம் செய்ய சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை மாவட்ட கல்வி அதிகாரி (DEO) மறுத்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம், ``பள்ளிக்கல்வித் துறையின் குழு பள்ளிக்கு வந்து தனித்தனியாக ஆய்வு நடத்துவதாக அதிகாரி கூறினார். நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பிரச்னை பற்றி விசாரித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தவறுசெய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/4A5nDSr

Post a Comment

0 Comments