அதிமதுரம் வேரில் தடவி கடத்தல்; மும்பையில் ரூ.1,725 கோடி மதிப்பிலான ஹெராயின் சிக்கியது எப்படி?!

மும்பை மற்றும் குஜராத் துறைமுகங்களுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. மும்பை அருகில் உள்ள நவ சேவா துறைமுகத்துக்கு கப்பலில் வரும் கண்டெய்னர்களில் போதைப்பொருள் கடத்திவரப்படும் சம்பவங்களும் இதற்கு முன்பு நடந்திருக்கின்றன.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து மும்பையின் நவசேவா துறைமுகத்துக்கு வந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட ஒரு கண்டெய்னரில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

போதைப்பொருளுடன் கண்டெய்னர்

டெல்லி போலீஸார் உடனே மும்பை விரைந்து நவ சேவா துறைமுகத்தில் டெல்லிக்கு அனுப்பப்படுவதற்காக இருந்த ஒரு கண்டெய்னரை சோதனை செய்தனர். அதில், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் விளையும் அதிமதுரத்தின் வேர் பகுதியில் ஹெராயினை தடவி கப்பலில் அனுப்பியிருந்தது தெரியவந்தது. இது குறித்து டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் தாலிவால் கூறுகையில், ``கடத்தல்காரர்கள் போதைப்பொருள் கடத்திக் கொண்டுவரப்படும் இடத்தை மாற்றியிருக்கின்றனர்.

தாலிவால்

22 டன் அளவுக்கு அதிமதுரம் வேர்களை இறக்குமதி செய்திருக்கின்றனர். அதில் ஹெராயின் தடவப்பட்டு இருந்தது. மொத்தம் 345 கிலோ அளவுக்கு ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.1,725 கோடியாகும்" என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இரானிலிருந்து வந்த கப்பலில் சோதனையிட்டதில் கண்டெய்னரில் 3,000 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21,000 கோடியாகும். இது தவிர அடிக்கடி பாகிஸ்தானிலிருந்து படகில் குஜராத் கடற்கரைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் குஜராத் கடற்கரையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/DrneUWY

Post a Comment

0 Comments