உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூரின் பள்ளியொன்றில் 12-ம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அப்போது 12-ம் வகுப்பு மாணவன் ஒருவனைப் பள்ளி முதல்வர் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த மாணவன், தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பள்ளி முதல்வரை சுட்டிருக்கிறான். துப்பாக்கியால் சுட்டதில் வலி தாங்கமுடியாமல் மயங்கி விழுந்திருக்கிறார். அதையடுத்து, மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், காயமடைந்த பள்ளி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்புடைய மாணவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/59TfNkv
0 Comments