மகாராஷ்டிரா தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு தானேவில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்க்கில் டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தார். அப்போது QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக பில் பதிவாகியிருக்கிறது.
வாடிக்கையாளரும் அதைச் சரியாக கவனிக்காமல் பணம் செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 55,000 டெபிட் ஆனதாக மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளரை தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறி, பணத்தை திரும்பச் செலுத்துமாறு கேட்டிருக்கிறார். உரிமையாளரும் தன்னுடைய வங்கிக் கணக்கை சரிபார்த்துவிட்டு அந்தப் பணத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கு திரும்பச் செலுத்தியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/J8aSykp
0 Comments