பெங்களூரை புரட்டிப்போட்ட பெருமழை! - வெள்ளக்காடான சாலைகள்

கர்நாடக தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெங்களூர் நகரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். சில பகுதிகளில் சிக்கித் தவித்த பொதுமக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வெள்ளத்தால் பெல்லந்தூர், சர்ஜாபுரா சாலை, ஒயிட்ஃபீல்ட், வெளிவட்ட சாலை, BEML லே-அவுட் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ராமநகரா உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்த முதல்வர், நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஜூன் 1 முதல், கர்நாடகாவில் 820 மிமீ மழை பெய்திருக்கிறது. தொடர் கனமழை காரணமாக மாநிலத்தில் 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/2Y5fRMP

Post a Comment

0 Comments