வாக்குகளுக்காக மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதாகவும், இலவசங்களால் நாடு முன்னேற்றமடையாது என்றும் பிரதமர் மோடி கூறியது, இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், இது தொடர்பாகப் பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால், ``பா.ஜ.க அரசு தன்னுடைய பணக்கார நண்பர்களின் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதை தேசதுரோகமாக அறிவிக்க சட்டம் கொண்டு வரவேண்டும். அப்படிப்பட்டவர்களை துரோகிகள் என்று அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.
இந்தியா சுதந்திரமடைந்த 75-வது ஆண்டில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பது அரசுக்குத் தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. சாமான்ய மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்காமல், அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது என்ன நியாயம்?'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Bw49hru
0 Comments