உத்தரப்பிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள சதார் என்ற இடத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அனுப் மவுரியா. இவர் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு போன் செய்து வழக்கு தொடர்பாக சில ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதோடு தனது குடியிருப்புக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வரும்படி அப்பெண்ணிடம் கேட்டுக்கொண்டார். அப்பெண்ணும் அந்த இடத்திற்கு வந்தார். அங்கு வந்த பிறகு அப்பெண்ணை தன்னை பின் தொடரும்படி இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டார். அவர் அப்பெண்ணை தனது போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்றார். அங்கு அப்பெண்ணை மவுரியா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். உடனே அப்பெண்ணை வழக்கு தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து போடுவதற்காகத்தான் தனது வீட்டிற்கு அழைத்ததாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். ஆனால் போலீஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மவுரியாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரையே இன்ஸ்பெக்டர் பாலியக் வன்கொடுமை செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்றொரு சம்பவத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயது நிதேஷ் என்பவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வந்து மீண்டும் அதே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் இருக்கும் கத்காரி என்ற கிராமத்தில் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிதேஷ் தனது ஊரை சேர்ந்த ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். கடந்த வாரம் தான் நிதேஷ் அந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு வேலையாக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணை மிரட்டி ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்ற நிதேஷ் மீண்டும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இது தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை மீண்டும் கைது செய்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Cm059VQ
0 Comments