கர்நாடக மாநிலம் உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில், கடந்த டிசம்பர் 27 -ம் தேதி ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து மாணவிகள், கல்லூரி வாசலில் போராட்டம் நடத்தினர். அதற்கு எதிர்வினையாக, பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நிபுணர்கள் குழு பரிந்துரைக்கும் வரை, காவித் துண்டிற்கும், ஹிஜாப் அணிவதற்கும் மாணவர்களுக்குத் தடை விதித்தது கர்நாடக அரசு. அதோடு, மதம் சார்ந்த உடைகளை மாணவர்கள் கல்வி நிலையங்களில் அணியக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
`ஹிஜாப் அணிவதென்பது அத்தியாவசிய மதப் பழக்கத்தின் ஒரு பகுதி அல்ல' என்ற அரசியல் சாசனத்தின் 25வது பிரிவின் கீழ் தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு அடங்கியோர் அமர்வு விசாரித்தது. இந்த தடை குறித்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்துக்கு பதில் அளிக்குமாறு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்து, அடுத்த விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/pnbRGwD
0 Comments