சிறை கைதி காதலியுடன் இருக்க, விடுதியில் காவல் இருந்த காவலர்கள்! - கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடகாவில் கடந்த 2020-ம் ஆண்டு இர்பான் என்ற நபர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பச்சாகான் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பச்சாகான் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகு கோர்ட்டிலிருந்து சிறைக்கு செல்லும் வழியில், கொலைக் குற்றவாளியை தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில், தனது காதலியுடன் நேரத்தை செலவிட காவல்துறை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், பெங்களூருவில் வசிக்கும் பச்சாகானின் காதலி தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில் அறையை பதிவு செய்திருக்கிறார்.

கர்நாடக காவல்துறை

அதைத் தொடர்ந்து காவலர்கள், பச்சாகானை அவரின் காதலியுடன் நேரம் செலவிட அனுமதித்திருக்கின்றனர். மேலும், பச்சா கானை சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வேண்டிய காவலர்களே அவரின் அறைக்கு காவல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, வித்யாகிரி பகுதி காவர்லர்கள் அந்த விடுதியில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போதுதான் இந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. சோதனையிட்ட காவலர்கள் பச்சா கானை அவர்களின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவலர்கள், விசாரணைக் கைதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/PdJl6T3

Post a Comment

0 Comments