மும்பை அருகில் உள்ள மீராரோட்டில் வசித்தவர் மாயக்(13). 8-வது படிக்கும் மாயக் அடிக்கடி தனது வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு செல்வது வழக்கம். அங்கு மாயக்குக்கு அன்சாரி, இம்ரான் ஷேக் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூவரும் சேர்ந்து மைதானத்தில் அமர்ந்து புகைப்பிடிப்பது வழக்கம். புகைப்பிடிப்பதில்தான் அவர்கள் மூவரும் நண்பர்களானார்கள் எனக் கூறப்படுகிறது. மாயக் தாயார் ஹீனா(27) பீர் பார் ஒன்றில் நடன பெண்ணாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று மாயக் புகைப்பிடிப்பது குறித்து அவனது தாயாரிடம் உறவினர் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மாயக்கிடம் அவனின் தாயார் கேட்டு கண்டித்ததாக தெரிகிறது. இதனால் தனது தாயாருடன் சண்டை போட்டுக்கொண்டு தான் வழக்கமாக செல்லும் மைதானத்திற்கு சென்றார். அங்கு அவரின் இரண்டு நண்பர்கள் ஏற்கெனவே இருந்தனர்.
அவர்கள் மாயக்கிடம் புகைப்பிடிக்கலாம் என்று கூறி பைக்கில் மாயக்கை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாயக்கை கடத்தி அவனது தாயாரிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். ஆனால் மாயக்கை எங்கு மறைத்து வைப்பது என்று தெரியாமல் பாலத்தில் செல்லும் போது மேலிருந்து கீழே தள்ளிவிட்டனர். கீழே விழுந்த மாயக் காயத்துடன் உதவி கேட்டு கத்தினார். இதனால் இருவரும் கீழே வந்து மாயக்கை கத்தியால் குத்திக்கொலை செய்து உடலை அங்கேயே பாலத்திற்கு கீழே போட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
மாயக் தாயார் டான்ஸ் பாருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இரவு நீண்ட நேரமாகியும் மாயக் வீடு திரும்பாததால் அவரின் மூத்த சகோதரன் அஜய் தனது தாயாருக்கு போன் செய்து மாயக் வீடு திரும்பாதது குறித்து தெரிவித்தார். உடனே ஹீனா விரைந்து வந்து தனது மகனை தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து மறுநாள் இது குறித்து ஹீனா தனது மகனை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். இந்நிலையில் மாயக்கின் மொபைல் நம்பரில் இருந்து மாயக் தாயாருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மாயக்கை கடத்தி இருப்பதாகவும், அவனை விடுவிக்கவேண்டுமானால் ரூ.35 லட்சம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இது பற்றி ஹீனா போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் மொபைல் போன் சிக்னலை வைத்து குற்றவாளிகள் இம்ரான், அன்சாரியை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்து மாயக் உடலை மீட்டனர். அவர்களிடம் விசாரித்த போது மாயக் தாயார் சமீபத்தில் புதிய வீடு வாங்கி இருப்பதால் அவரிடம் அதிக பணம் இருக்கும் என்று கருதி கடத்தியதாக இருவரும் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/esIhpSM
0 Comments