கர்நாடகா: 3 பெண்கள் மர்மக் கொலை; 4 வது கொலைக்கும் ஸ்கெட்ச்... கொலையாளி சிக்கியது எப்படி?!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து மூன்று பெண்களின் உடல்கள் வெவ்வேறு மாவட்டத்தில், பல பாகங்களாக காவல்துறைக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த காவல்துறைக்கு சித்தலிங்கப்பா என்பவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கும் சித்தலிங்கப்பாவை காவல்துறை கைது செய்து விசாரித்தபோது, அவர் கூறிய தகவல்கள் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை

இது தொடர்பாக காவல்துறை வட்டாரம் கூறுகையில், ``சித்தலிங்கப்பா - பாலியல் தொழில் செய்துவந்த சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். மேலும், மாண்டியா பகுதியில் வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சந்திரா, தான் இந்த பாலியல் தொழிலுக்கு வந்ததற்கு 5 பெண்கள் தான் காரணம் எனக் கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த சித்தலிங்கப்பா அந்த 5 பெண்களையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி குறிப்பிட்ட அந்த பெண்களை மாண்டியாவில் உள்ள தன் வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளனர். அந்த உடல்கள் தான் கடந்த மாதம் ஜூன் 8-ம் தேதி கண்டெடுக்கப்பட்டன.

சித்தலிங்கப்பா - சந்திரா

அதைத் தொடர்ந்து 4 வது பெண்ணை கொலை செய்யத் தயாரான நிலையில் தான் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு எந்த சந்தேகமும் வராத அளவு நேர்த்தியாக இருந்துள்ளனர். இன்னும் சொல்வதானால் சித்தலிங்கப்பாவின் வீட்டினருக்குக் கூட இவர் எங்கே செல்கிறார் எனத் தெரிந்திருக்கவில்லை. யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்களுக்குள் இருக்கும் தொடர்பினால் தான் சந்திராவை விசாரித்தோம். அதில் தான் சித்தலிங்கப்பாவும் சிக்கினார்." எனத் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/AGkvLJz

Post a Comment

0 Comments