உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் காஷ்யப் (21) என்ற நபர் பீட்சா டெலிவரி செய்யும் பணி செய்கிறார். இவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் 500 வரை சம்பாதித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், இரவில் கடைகள் மூடப்படும் நேரத்தில் சுமார் 11 மணிக்கு இளைஞர் ஒருவர் தொலைபேசியில் ஒரு பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார். அதையடுத்து, சச்சின் சக ஊழியருடன் பீட்சா ஆர்டர் செய்தவரின் இடத்துக்குச் சென்று பீட்சாவை டெலிவரி செய்திருக்கிறார்.
அப்போது பீட்சாவை ஆர்டர் செய்த இளைஞர்கள் இருவர், சச்சினிடம் பீட்சா டெலிவரிக்கு கொடுத்த தொகையில் ஒரு கிழிந்த 200 ரூபாய் நோட்டும் இருந்திருக்கிறது. அதை சச்சின் அவர்களிடம் கொடுத்துவிட்டு வேறு 200 ரூபாய் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞர்கள், `இந்த ரூபாய் நோட்டு நன்றாகத்தான் இருக்கிறது, எடுத்துச் செல்' எனக் கூறியிருக்கின்றனர்.
அதையடுத்து, அதை வாங்கிக்கொண்ட சச்சின், தன் நண்பருடன் அருகிலிருந்த கடைக்குச் சென்று அந்த கிழிந்த 200 ரூபாய் நோட்டை கொடுத்து குளிர்பானம் வாங்கியிருக்கிறார். அப்போது கடைக்காரர் அந்த 200 ரூபாய் செல்லாது எனக்கூறி வாங்க மறுத்திருக்கிறார்.
அதனால், சச்சின் அவர் நண்பருடன் அந்த கிழிந்த ரூபாய் நோட்டை கொடுத்த நதீம் என்பவரின் வீட்டுக்குச் சென்று, நோட்டை மாற்றித் தருமாறு கேட்டிருக்கிறார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நதீம், தன்னுடன் வாக்குவாதம் செய்த பீட்சா டெலிவரி ஊழியர் சச்சினை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
அதில் காயமடைந்த சச்சின் அலறியபடி மயங்கி விழுந்திருக்கிறார். சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர், சச்சினை அவர் நண்பர் உதவியுடன் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சச்சினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீஸார், சச்சினை துப்பாக்கியால் சுட்ட நதீம், அவர் நண்பர் இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்து, அவர்களைக் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/xoa61Mp
0 Comments