இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்ததாக தெரிவிக்கப்பட்ட 37 வயது பெண்ணின் சடலமானது, மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பெண்ணின் மரணத்திற்கு, ஒரு கும்பல் காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண் டென்சி ஆண்டனி (Densi Antony). மூன்று குழந்தைகளுக்கு தாயான இவருக்கு, அபுதாபியில் 2019 ல் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென இவரும், இவரின் முதலாளி டி.பி. ஹாரிஸும் பிளாட்டில் ஒன்றாக இறந்து கிடந்தனர்.
ஹாரிஸ் தன்னுடைய மணிக்கட்டை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, டென்சியை கொலை செய்துள்ளார் என இந்த வழக்கை ஐக்கிய அரபு அமீரக போலீஸார் முடித்தனர்.
முதலில் விபத்து என்றும், பின்னர் தற்கொலை என்றும் டென்சியின் மரணம் அவரின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரின் உடல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் உள்ள செயின்ட் ஜோசப் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
2019ம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் ஷபா ஷரீப் என்பவரை, ஷைபீன் அஷ்ரப் கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி, மூலநோயை குணப்படுத்தும் இயற்கை மருந்தின் பொருட்களை குறித்த தகவலை கேட்டு கொடுமைப்படுத்தி, ஒரு வருடம் கழித்து கொடூரமான முறையில் கொன்றனர். ஷபா காணாமல் போனதை தொடர்ந்து, அவரின் குடும்பத்தார் மைசூர் காவல் நிலையில் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த புனலாய்வு குழு, ஹாரிஸ் மற்றும் டென்சியின் மரணத்தில் ஷைபீன் அஷ்ரப் கும்பல் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
மே மாதம் இந்த கும்பல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய மகன் இறந்தது குறித்து தீவிர விசாரணை செய்யுமாறு, ஹாரிஸின் தாய் போலீஸாரிடம் மனு அளித்தார். ஏனெனில் ஹாரிஸின் முன்னாள் பிசினஸ் பார்ட்னர் தான் அஷ்ரப். ஹாரிஸ் தங்கியிருந்த அதே கட்டிடத்தில் ஒரு பிளாட் ஏற்பாடு செய்து அந்த கும்பல் தங்கி, அவர்களைத் தாக்கி கொலையை அரங்கேற்றி உள்ளது தெரிய வந்தது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்ததாக தெரிவிக்கப்பட்ட 37 வயது பெண்ணின் சடலமானது, மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/14GCQY7
0 Comments