உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரிலுள்ள அரசு அலுவலகத்தில் கிளர்க் ஆகப் பணியாற்றிவருகிறார் ஷம்சாத் அகமது. இவருக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுவந்திருக்கிறது. இதன் காரணமாக இவருடைய மனைவி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவரைச் சமாதனப்படுத்தி அழைத்து வர நினைத்த ஷம்சாத் அகமது, தன்னுடைய அலுவலகத்திலுள்ள உயரதிகாரியிடம் இரண்டு நாள்கள் விடுப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஷம்சாத் அகமது எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், ``எனக்கும் என் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த என்னுடைய மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாள். அவளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வர நான் ஊருக்குச் செல்லவேண்டியிருக்கிறது. நான் இதனால் மனதளவில் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். என்னுடைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு எனக்கு இரண்டு நாள்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியில் எழுதப்பட்ட இந்தக் கடிதம் வைரல் ஆனதை அடுத்து, அவருடைய உயரதிகாரி இவருக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளித்திருக்கிறார். மேலும் இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டு அலுவலகத்துக்கு வருமாறும் தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Ff8OCjw
0 Comments