ஜம்மு-காஷ்மீர்: மாதா கோயில் பாதயாத்திரை; குறுகியகாலத்தில் 170 அடி பாலம் அமைத்து உதவிய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரின், கிஷ்த்வார் மாவட்டத்தில் `மச்சயில் மாதா இமயமலை கோயில்' அமைந்திருக்கிறது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்தக் கோயிலில் கடந்த இரண்டாண்டுகளாக யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் தாக்கம் தணிந்திருப்பதால் பாத யாத்திரை தொடங்கியிருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துச் செல்லப்பட்டது.

தற்போது வருடாந்தர புனித யாத்திரை தொடங்கவேண்டியிருந்ததால், குறுகியகாலத்தில் பாலம் அமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாதா கோயில் நிர்வாகத்தினர் ராணுவத்தின் உதவியை நாடியிருக்கின்றனர். அதையடுத்து ராஷ்ட்ரிய ரைஃபிள் படை இன்ஜினீயர்கள் குழு, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறுவனத்தின் உதவியுடன் கம்பிப்பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டது.

ஜம்மு காஷ்மீர்

பாத யாத்திரைக்கான சீஸன் தொடங்கி, யாத்ரீகர்கள் வரத் தொடங்கிவிட்டதால், அதிகாரிகள் பாலத்துக்கான பணிகளை இரவு பகலாக மேற்கொண்டனர். இதன் விளைவாக மாதா கோயிலுக்குச் செல்ல ஏதுவாக 170 அடி உயர புதிய இரும்புப் பாலம் மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டிருப்பதால், யாத்ரீகர்கள் தற்போது பாலத்தின் வழியாக மாதா கோயிலுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். ராணுவத்தினரின் இந்தச் சேவையை ஜம்மு-காஷ்மீர் அரசு உயரதிகாரிகள் பாராட்டியிருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/dnbmQkO

Post a Comment

0 Comments