மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல் பூரில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த சந்தோஷ் பால், அவர் மனைவி லேகா இருவரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துவைத்திருப்பதாகப் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவர் வீடு மற்றும் அவர் மனைவிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அதில், சந்தோஷ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக பங்களா கட்டியிருந்தது தெரியவந்தது.
No, these visuals aren't of any 5-star resort, but actually the palatial house of Assistant RTO Santosh Pal built in sprawling 10,000 sq ft area in MP's Jabalpur. Ongoing search of the house by EOW teams have led to these visuals. @NewIndianXpress@TheMornStandard@santwana99 pic.twitter.com/210WAJhKPh
— Anuraag Singh (@anuraag_niebpl) August 18, 2022
சந்தோஷ் வருமானத்துக்கு 650 மடங்கு அதிகமாக சொத்து சேர்த்துவைத்திருப்பது இந்தச் சோதனையில் தெரியவந்திருக்கிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர சிங் ராஜ்புத், ``புதன்கிழமை இரவே இந்த சோதனையை தொடங்கிவிட்டோம். குற்றம்சாட்டப்பட்டவரின் 10,000 சதுர அடி பங்களாவில் நீச்சல் குளம், ஜக்குஸி பாத் டப், மினி பார், ஹோம் தியேட்டர் மற்றும் சந்தோஷ் பாலுக்குத் தனி அலுவலகம் என அனைத்து வசதிகளும் உள்ளது. அவர் வருமானத்துக்கு அதிகமாக 650 மடங்கு சொத்து சேர்த்துவைத்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
MP में करोड़ों की प्रॉपर्टी, लग्जरी कारें-फार्महाउस, Mall जैसा घर।
— Shubhankar Mishra (@shubhankrmishra) August 18, 2022
- ARTO संतोष पाल सिंह की सेलरी 65K है और छापेमारी में इनकी जीवन भर की तनख़्वाह से 650 गुना संपत्ति मिली।
- घर में ARTO साहब ने अपना ‘निजी थियेटर’ बना रखा है।
- साधारण घरों से बड़ा तो इनका Bathroom है। pic.twitter.com/q3YTeyCh6U
சோதனையின் போது, ரூ.16 லட்சம் ரொக்கம், நகைகள் மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இது மட்டுமல்லாமல் தம்பதியருக்கு ஐந்து வீடுகள், ஒரு பண்ணை வீடு, ஒரு கார், ஒரு எஸ்யூவி மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சந்தோஷ் பால் அவர் மனைவி லேகா பால்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/praUQVF
0 Comments