கர்நாடக மாநிலத்தில், சப் இன்ஸ்பெக்டர் ஆள்சேர்ப்பு முறைகேடு வழக்கில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல்(ஏ.டி.ஜி.பி ) அம்ரித் பால், குற்றப் புலனாய்வுத்துறை (சி.ஐ.டி) போலீஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கர்நாடகாவில், பதவியிலிருக்கும் ஏ.டி.ஜி.பி அதிகாரியொருவர் கைதுசெய்யப்படுவது இதுவே முதன்முறை.
கடந்த 2021-ல் 545 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆள்சேர்ப்புக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கை, சி.ஐ.டி விசாரிக்குமாறு கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை சி.ஐ.டி போலீஸ் கைதுசெய்திருந்தது. இந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் ஆள்சேர்ப்பின்போது அதன் தலைவராக இருந்த, கூடுதல் ஏ.டி.ஜி.பி அம்ரித் பால் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ``இந்த விவகாரத்தில் நாங்கள் சமரசம் ஏதும் செய்துகொள்ள மாட்டோம். இதில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்ய சி.ஐ.டி-க்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏ.டி.ஜி.பி அம்ரித் பால் சி.ஐ.டி-யால் விசாரிக்கப்படுகிறார். இதில் சட்டம் அதன் போக்கை முன்னெடுக்கும்" என்று கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/69Hga4b
0 Comments