உத்தரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியில் அதிவேகமாகச் செல்லும் குப்பை வண்டியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் புஷ்-அப் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் அதிவேகமாகச் செல்லும் குப்பை வண்டியில் புஷ்-அப் எடுக்கிறார். அதன் பின்பு எழுந்து நிற்கும் அவர்... சில வினாடிகளில் கீழே தவறி விழுகிறார். அதனால், அவருக்கு முதுகு, கால் என உடலின் சில பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் பலரும், ``ஆபத்தான முறையில் குரங்கு சேட்டைகள் செய்தால் விளைவு இப்படித்தான் இருக்கும்!" எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
à¤à¥à¤®à¤¤à¥à¤¨à¤à¤°, लà¤à¤¨à¤ à¤à¤¾ à¤à¤² रात à¤à¤¾ दà¥à¤¶à¥à¤¯-बन रहॠथॠशà¤à¥à¤¤à¤¿à¤®à¤¾à¤¨, à¤à¥à¤ दिनà¥à¤ तठनहà¥à¤ हॠपाà¤à¤à¤à¥ विराà¤à¤®à¤¾à¤¨!à¤à¥à¤¤à¤¾à¤µà¤¨à¥: à¤à¥à¤ªà¤¯à¤¾ à¤à¤¸à¥ à¤à¤¾à¤¨à¤²à¥à¤µà¤¾ सà¥à¤à¤¨à¥à¤ न à¤à¤°à¥à¤! pic.twitter.com/vuc2961ClQ
â Shweta Srivastava (@CopShweta) July 17, 2022
இந்தச் சம்பவம் தொடர்பாக லக்னோ ஏ.டி.எஸ்.பி ஸ்வேதா ஸ்ரீவஸ்தவா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் அந்த வீடியோவைப் பகிர்ந்து, ``லக்னோவின் கோம்திநகர்ப் பகுதயில் இளைஞர் ஒருவர் லாரியின் மேல் நின்றபடி ஆபத்தான முறையில் சக்திமான் போல புஷ்-அப் செய்திருக்கிறார். ஆனால், இதில் பரிதாபம் என்னவென்றால் அவரால் இப்போது அடுத்த சில நாள்களுக்கு உட்காரக்கூட முடியாது என்பதுதான். எச்சரிக்கையுடன் சொல்கிறோம்... தயவு செய்து யாரும் இது போல ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://www.vikatan.com/news/crime/man-does-pushups-on-moving-truck-gets-brutally-injured
0 Comments