நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் வெளிநாட்டை சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விவாத குரலும் எழுந்துள்ளது. சிலர் ரன்வீர் சிங்கின் செயல் மிகவும் துணிச்சலானது என்று பாராட்டியும் இருக்கின்றனர். இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் செய்துள்ளது.
பெண்களின் உணர்வுகளை புன்படுத்திவிட்டதாக கூறி மும்பை போலீஸார் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்கின் புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு ரன்வீர் சிங்கிற்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
இந்தூரை சேர்ந்த `நேகி கீ திவார்’ என்ற தொண்டு நிறுவனம் ரன்வீர் சிங்கிற்கு கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளை சேகரித்து வருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. பொதுமக்கள் பழைய ஆடைகளை போடுவதற்காக சாலையோரம் நன்கொடை பாக்ஸ் ஒன்றையும் தொண்டு நிறுவனம் வைத்துள்ளது.
இது குறித்து ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தும் தொண்டு நிறுவன பிரதிநிதி கூறுகையில், ``ரன்வீர் சிங் இளைஞர்களின் முன்மாதிரியாக இருக்கிறார். அவரை பல இளைஞர்கள் பின்பற்றுகின்றனர். ரன்வீர் சிங்கின் இந்த புகைப்படங்கள் மலிவான விளம்பரமாகவே தெரிகிறது. இது இளைஞர்களை பாதிக்கும். இது தொடரக்கூடாது. எனவேதான் போராட்டம் நடத்துகிறோம்” என்று தெரிவித்தார். தனது கணவரின் செயலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நடிகை தீபிகா படுகோனே திணறிக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே நடிகர் ரன்வீர் சிங்கின் துணிச்சலான செயலை பார்த்து நடிகை உர்ஃபி ஜாவேத் தனது மேலாடையை துறந்துள்ளார். விதவிதமான ஆடைகளை அணிவதில் மிகவும் பிரபலமான உர்ஃபி ஜாவேத் தனது மேலாடையை துறந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/vhTwscS
0 Comments