நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
``ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு 417 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதல்கள் 2019-ல் 255, 2020-ல் 244, 2021-ல் 229 எனக் குறைந்திருக்கிறது.
2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 80, 2020-ல் 62, 2021-ல் 42 எனக் குறைந்திருக்கிறது. 2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 39, 2020-ல் 37, 2021-ல் 41 எனக் குறைந்திருக்கிறது. இதற்கிடையில், நக்சல் வன்முறை சம்பவங்கள் 2009-ல் 2,258-ஆக பதிவாகியிருந்த நிலையில், அது தற்போது 77 சதவிகிதம் குறைந்து 2021-ல் 509-ஆக பதிவாகியிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமையை சீராக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தன் பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/7kwIYv1
0 Comments