6 சிசிடிவி; மியூசிக் சிஸ்டம்; பயணிகள் வாட்ஸ் அப் குரூப்; அசத்தும் டிரைவர் - கண்டக்டர் ஜோடி!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பற்றி உள்ளூர் மக்களிடையே பரவலாகப் பேச்சு எழுந்திருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பற்றி உள்ளூர் மக்களிடையே பரவலாகப் பேச்சு எழுந்திருக்கிறது. இப்பேருந்தில் கிரி என்பவர் டிரைவராகவும், அவரின் மனைவி தாரா கண்டக்டராகவும் பணியாற்றி வருகின்றனர். மற்ற அரசு பேருந்துகளைப் போல் இல்லாமல் இப்பேருந்து பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த பேருந்தில், பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமிராக்கள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, அவசரகால சுவிட்சுகள் , குழந்தைகளைக் கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் போன்றவற்றை கொண்டிருக்கிறது. மேலும் பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் இப்பேருந்தில் இருக்கிறது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது பணத்தையே செலவழித்துள்ளனர்.

கிரி - தாரா தம்பதி

இந்த தம்பதிகளுக்கு என அப்பேருந்தில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது . இப்பேருந்தில் வழக்கமாக பயணிப்பவர்கள் அவர்களுக்குள்ளேயே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தினமும் நாங்கள் அதிகாலை 2 மணிக்கு எழுத்து ஹரிபாட் டிப்போவிற்கு சென்று, பேருந்தை சுத்தம் செய்து விட்டு, பின்னர் எங்களது பணியை காலை 5.30 மணிக்கு தொடங்குவோம் என்று பேசியுள்ளார் தாரா. இவர்களது பணியை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/YjICs5b

Post a Comment

0 Comments