நடிகரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்; இறுதிசடங்கு செய்ய முன்வந்த கேரள சினிமா அகாடமி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சினிமா நடிகர் ராஜ் மோகன்(88). ஓ.சந்துமோகன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு கலாநிலையம் கிருஷ்ணன் நாயர் 1967-ல் 'இந்துலேகா' என்ற சினிமாவை இயக்கினார். அந்த சினிமாவில் மாதவன் என்ற பெயரில் கதாநாயகனாக நடித்திருந்தார் ராஜ் மோகன்.

கலாநிலையம் கிருஷ்ணன் நாயரின் மருமகனான ராஜ்மோகன் பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொணடார். பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தைவிட்டு பிரிந்து தனியாக வாழ்ந்தார் ராஜ் மோகன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. திருவனந்தபுரத்தில் தகரஷீட்டுகளால் மறைக்கப்பட்ட ஒரு வீட்டில் ராஜ் மோகன் வசித்து வந்த சம்பவம் அந்த சமயத்தில் பரபரப்பான செய்தி ஆனது.

கேரள சினிமா அக்காடமி

அதன் பின்னர் திருவனந்தபுரம் புலயானகோட்டையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்தார். இதற்கிடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆதரவற்றோர் இல்லத்திலேயே சிகிச்சை எடுத்து வந்தார். மேலும் உடல்நிலை மோசமானதால் கடந்த 4-ம் தேதி திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜ் மோகன் உயிரந்தார்.

இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் யாரும் அவரது உடலை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால், இதையடுத்து கடந்த 17-ம் தேதி அவரது உடல் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. நடிகர் ராஜ்மோகனின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய கேரள அரசு முடிவு செய்தது. கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வாசவனின் அறிவுறுத்தல்படி சினிமா அகடாமி அவரது உடலை பெற்று இறுதிச்சடங்கு செய்ய முன்வந்துள்ளது. பிரபல நடிகரின் உடலை பெற்றுக்கொண்டு, இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



from தேசிய செய்திகள் https://ift.tt/qzOYW6G

Post a Comment

0 Comments