உ.பி: ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பேருந்துகள் - 8 பேர் பலி, 20 பேர் காயம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவையடுத்த பாராபங்கி மாவட்டத்தில் டபுள் டெக்கர் எனப்படும் இரண்டடுக்குகள் கொண்ட 2 பேருந்துகள் பீகாரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அப்போது பேருந்துகள் நரேந்தர்பூ மாத்ரஹா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்தக் கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 20 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் லக்னோ விபத்து சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்... புர்வாஞ்சல் விரைவுச் சாலையில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது'' எனப் பதிவிட்டிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://www.vikatan.com/news/accident/8-killed-in-collision-of-double-decker-buses-on-upnbsp

Post a Comment

0 Comments