கன்வர் யாத்திரையில் ஈடுபட்ட பக்தர்கள் மீது லாரி மோதியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விபத்து குறித்து ஆக்ரா மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா கூறியதாவது, `` உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இன்று சுமார் 2.15 மணியளவில் கன்மார் யாத்திரையில் ஈடுபட்ட பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பித்தார்.
இவர்கள் ஹரித்துவாரில் இருந்து குவாலியருக்கு கன்வர் யாத்திரீகர்களுடன் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/BhO9uFn
0 Comments