``ஒரு ட்வீட்க்கு ரூ.2 கோடி வாங்குனேனா?!; வழக்கம் போல் எனது பணியை செய்வேன்" - முகமது ஜுபைர்

ஆல்ட் நியூஸ் (Alt News) நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிகையாளருமான முகமது ஜுபைரை 2018-ம் ஆண்டு ஒரு ட்வீட் பதிவிட்டதற்காக, கடந்த ஜூன் 27-ம் தேதி அன்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, மூத்த பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், `உண்மையை வெளிக்கொண்டு வருபவர்களை ஒடுக்க நினைக்கிறது பா.ஜ.க' என்று ஜுபைருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜாமீனில் வெளிவந்த பின்னார் ஜூபைர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஜுபைர் கைது செய்யப்பட்ட போது

அப்போது, ``உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காததால், நான் வழக்கம் போல் எனது பணியை செய்வேன். எனது ட்வீட்களுக்காக நான் ரூ. 2 கோடி பெற்றதாகதான் உத்தரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. நான் விடுதலையான பிறகுதான் இந்த குற்றச்சாட்டு பற்றி எனக்கு தெரியவந்தது. எந்த விசாரணையிலும் என்னிடம் இது பற்றி கேட்கவில்லை. என்னை காவல்துறை சித்திரவதை செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்

இந்த குற்றச்சாட்டை முதலில் உத்திரபிரதேச அரசு உ.பி நீதிமன்றத்தில் தெரிவித்தது. உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கரிமா பிரசாத், ``மனுதாரர் பத்திரிகையாளரே இல்லை. வன்முறையை தூண்டும் ட்வீட் மூலம் அவர் சம்பாதிக்கிறார். தவறான ட்வீட்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு பணம் அவருக்கு கிடைக்கும். அவர் தனது ட்வீட்களுக்கு ரூ. 2 கோடி பெற்றதை அவர் ஏற்றுக்கொண்டார். வெறுப்பூட்டும் பேச்சு வீடியோக்களை சாதகமாகப் பயன்படுத்தி வகுப்புவாத பிளவை உருவாக்க அவற்றை வைரலாக்கும் நபர்தான் இவர்" எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து விசாரணைக்கு பின்பு தான் ஜுபைர் ஜாமீனில் வெளிவந்தார். முகமது ஜூபைர் ட்வீட் போடுவதை நிறுத்த வேண்டும் என்ற உத்தரபிரதேச அரசின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.



from தேசிய செய்திகள் https://ift.tt/nSNHyQJ

Post a Comment

0 Comments