கேரளா: கடன் பிரச்னை: தட்டுக்கடைக்கு ரூ.50,000 அபராதம் - ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் கல்லம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிக்குட்டன்(51). இவரின் மனைவி சந்தியா(46). இவர்களுக்கு அஜீஷ்(19) என்ற மகனும், அமேயா(13) என்ற மகளும் இருந்தனர். மணிக்குட்டனின் சித்தி தேவகி(85) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்தார். மணிக்குட்டன் சாத்தம்பாறை பகுதியில் தட்டுக்கடை (சிறிய ஓட்டல்) ஒன்றை நடத்தி வந்தார்.

தட்டுக்கடை சுகாதாரமாக இல்லை என கடந்த சில நாள்களுக்கு முன் பஞ்சாயத்து ஃபுட் அண்ட் சேப்டி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருந்தனர். அபராத தொகையை செலுத்த முடியாமல் மணிக்குட்டன் தனது தட்டுக்கடையை இரண்டு நாட்களாக பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தட்டுக்கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் இன்று காலை மணிக்குட்டனின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீடு பூட்டி இருந்தது. வீடு திறக்காதது பற்றி அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார். அப்பகுதியினர் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று பார்த்தபோது மணிக்குட்டன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

மணிக்குட்டன் நடத்திவந்த தட்டுக்கடை

மற்ற நான்குபேரும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், `மணிக்குட்டனுக்கு ஏற்கனவே கடன்கள் உண்டு. இந்த நிகையில் அவரின் தட்டுக் கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் 50,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தனர். இந்த காரணத்தால் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம்” என்றனர்.

ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து. விசாரணை நடத்த திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி திவ்யா பி.கோபிநாத் கல்லம்பலம் பகுதிக்கு சென்றார். முதற்கட்ட விசாரணைக்கு பின் எஸ்.பி திவ்யா பி.கோபிநாத் கூறுகையில், "நான்கு உடல்கள் இரண்டு அறைகளில் தரையில் கிடந்தன. ஒருவருடைய உடல் மட்டும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

மரணத்திற்கு வெளியில் இருந்து யாரும் காரணம் இல்லை என முதற்கட்ட விசாரணை தெரியவருகிறது. வேறு காரணம் எதாவது இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

திருவனந்தபுரம் அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/wL0Hp9N

Post a Comment

0 Comments