ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியையின் பெயர், அவர் பணியாற்றிய பள்ளிக்கு வைக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களில் மட்டும் பயங்கரவாதிகளால் அரசு ஊழியர், வங்கி ஊழியர், டி.வி நடிகை, எனப் பலர் தொடர்ச்சியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் கடந்த மே மதம் 31-ம் தேதியன்று, குல்காம் மாவட்டத்தில் கோபால்போரா பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிவந்த ரஜினி பாலா (36) என்ற பெண் ஆசிரியரை, பயங்கரவாதிகள் சிலர் பள்ளிக்குள் புகுந்து சுட்டுவிட்டு தப்பித்துச்சென்றுவிட்டனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ரஜினி பாலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது ரஜினி பாலா பணியாற்றிய அரசுப் பள்ளிக்கு, அவருடைய பெயரை சூட்டப்போவதாக ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தகவல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய மனோஜ் சின்ஹா, ``குல்காம் மாவட்டத்திலுள்ள கோபால்போரா அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரஜினி பாலாவின் பெயர் சூட்டப்படும். அதுமட்டுமல்லாமல், ரஜினி பாலாவின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தேன். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்" எனக் கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/eHYqbIt
0 Comments