கண்ணாடிக்கு பதில் சோலார் பேனல்... மின்சார வாரியத்துக்கே மின்சாரம் விற்பனை !

ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் நகரில் குருத்வாரா சந்திப்பில் கட்டப்பட்டுள்ள ஐந்து மாடி கட்டிடம் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஏனெனில் இது வெறும் ஐந்து மாடி கட்டிடமாக மட்டும் இல்லாமல், கட்டிடத்தின் கண்ணாடிக்கு பதில், சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சோலார்

இதை குறித்து கட்டிடத்தின் உரிமையாளர் பாப்ஜி என அழைக்கப்படும் நாராயண ராவ் கூறியதாவது, “ ஏற்கனவே நகரத்தில் சூழலை பாதிக்கும் பல காரணிகள் உள்ளது என்பதால் சமூக காரணத்துக்காகவே இந்த கட்டிடம் கட்டப்பட்டது.

கட்டிடத்தின் முன் பக்கம் மற்றும் பக்கவாட்டிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. தூசியிலிருந்து கட்டிடத்தை பாதுகாக்க கண்ணாடியை வைத்து கட்டிடம் கட்ட தீர்மானித்தோம். அதற்கு 20 லிருந்து 25 லட்சம் வரை செலவாகும். ஆனால் அதனால் எந்த வருமானமும் இல்லை.

எனவே 45 லட்ச திட்டத்தில் சோலார் பேனல்கள் வைத்து ஐந்து மாடி கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடத்துக்கு தினசரி 35 முதல் 50 கிலோவாட் வரை மின்சாரம் தேவைப்படும் நிலையில், சோலார் பேனல்கள் தினசரியாக 100 கிலோவாட் மின்சாரத்தை வழங்குகிறது. எனவே, ஆந்திர பிரதேச கிழக்கு மின் விநியோக நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மீதமுள்ள மின்சாரம் விற்கப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் 24 ஏசி அறைகளை கொண்ட விருந்தினர் மாளிகை உள்ளது. விரைவில் இந்தக் கட்டிடம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/pyaV9DX

Post a Comment

0 Comments