உத்திரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தில் ஆண் குழந்தை பெற்றுத் தரவில்லை எனக் கூறி குமஸ்தா என்ற பெண்ணை அவர் கணவர் மற்றும் மாமியார் தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த வீடியோவில், குமஸ்தா என்ற பெண் தன்னை விட்டு விடுமாறு கதறி அழுகிறார். இருப்பினும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவரை சரமாரியாக தாக்குகின்றனர். மேலும், அவரை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய மஹோபா காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சுதா சிங், ``இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். மாமியார் தன்னை தாக்கியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். அதனால், அவர் கணவர், மாமியார் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/dcomq7H
0 Comments