விருதுநகர் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்ற ஹரி. மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்மீது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆயுதப்பயிற்சி அளித்தது, அவர்களைவைத்து கூட்டம் நடத்தியது, அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டு, இவரை தேசியப் புலனாய்வு முகமை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``ஐயப்பன் என்ற ஹரி சாத்தூர்ல இருக்குற கலைக்கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்தான். இங்கிருந்துதான் அவன் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பிச்சிருக்கான். கல்லூரியில் படிக்கும்போது முதல்வருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது, சாலை மறியல் செய்தது, இன்னும் பிற குற்றச் சம்பவங்களுக்காக சாத்தூர் நகர் போலீஸால் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். பின்னர் வெளியே வந்து வேலைத்தேடி ஹரி கேரளாவுக்குப் போன இடத்துல, ஆயுத வழக்கில் கேரளா பூக்கட்டும் பாடம் போலீஸ் கைது பண்ணிருக்காங்க. அதே சமயத்துல இன்னொரு வழக்குல ஹரியை சாத்தூர் போலீஸ் கைது செஞ்சாங்க.
இவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பில் சேர்ந்துகொண்டு 2018-ல் அரசுப் பள்ளிக்கெதிராகப் போராட்டம் நடத்தியதற்காக கீழராஜக்குலராமன் போலீஸால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தவிர நியூட்ரினோ, கெயில், ஸ்டெர்லைட், மீத்தேன், நான்கு வழிச்சாலை, கார்பரேட் கம்பெனிகளுக்கு எதிராகப் பல்வேறு கட்சிகள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். மேலும், அரசுக்கெதிராக போஸ்டர் ஒட்டியது, போராட்டம் நடத்தியது, தட்டிபோர்டுகள் வைத்து மக்களை அரசுக்கெதிராக தூண்டிவிடுவது, மாவோயிஸ்டுகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றது உள்ளிட்ட புகார்கள் ஐயப்பன் என்ற ஹரிமீது இருக்கு. இது தொடர்பான வழக்குகள் இப்போதும் நீதிமன்றத்துல நடந்துட்டு வருது.
இவர் கலைக் கல்லூரியில படிக்கும்போது குடல்பூரிநத்தத்திலிருந்து அதேக் கல்லூரியில் படிச்ச ஒரு பெண்ணை காதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டார். இந்த தம்பதிக்கு 2 வயசுல பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் இருக்கு. உடல்நிலை சரியில்லாத காரணத்தால கடந்த ஒரு வருடமா, குடல்பூரிநத்தத்துல உள்ள அவருடைய மாமனார் வீட்டில் குடும்பத்தோட வாழ்ந்துட்டு வந்தார். இந்த நிலையில, கேரளாவுல இவர் மீதான மாவோயிஸ்டுகள் தொடர்பான கேஸ் போலீஸ் கையிலிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டிருக்கு.
மாவோயிஸ்டோட பயிற்சி பெற்ற காலத்துல இவருக்கு ராவணன்-ங்குற பெயரும் இருந்திருக்கு. தொடர்ந்து, கேரளா காட்டுக்குள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தோட சேர்ந்து அரசு நிலைகள்மீதும் போலீஸ் சாவடிகள்மீதும் தாக்குதல் நடத்திருக்காங்க. இளைஞர்களை மூளைச்சலவை செஞ்சி அரசுக்கெதிராக செயல்பட தூண்டுவிட்டுருக்காங்க. மாவோயிஸ்ட் கூட்டம் நடத்தி சதிச்செயலுக்கு திட்டம் தீட்டிருக்காங்க. இது தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே இப்ப ஐயப்பன் என்ற ஹரியை என்.ஐ.ஏ. பிடிச்சிட்டுப் போயிருக்கு" என்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/bi3jqHk
0 Comments