உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக நேற்று வாரணாசி சென்றிருந்தார். அங்கு, காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு, வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் வாரணாசியிலிருந்து ஹெலிகாப்டரில் லக்னோ கிளம்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக யோகி பயணித்த ஹெலிகாப்டர்மீது பறவை மோதியது. பறவை மோதியதால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு ஹெலிகாப்டர் அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் மற்றொரு விமானத்தில் முதல்வர் யோகி லக்னோ சென்றார்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் பாதுகாப்பாக வாரணாசியின் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவித்திருக்கும் அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/40x2tMq
0 Comments