இந்தியாவில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ சட்ட அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. எனினும், பல தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடிகள், தங்கள் வாழ்க்கையை தாங்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரேசத்தை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி ஒன்று எடுத்துள்ள முடிவு, பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு தோழிகள், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினர். இதற்கு இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கண்மூடித்தனமாக அன்பு வைத்திருந்தனர். இருவரும் தங்களது பெற்றோரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை.
இச்சூழலில், இரண்டு பெண்களில் ஒருவர், தன் காதலிக்காக தனது பாலினத்தையே மாற்றி ஆணாக முடிவு செய்தார். இதற்காக பிரயக்ராஜ் நகரில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில், பாலின உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேல் உடல் மற்றும் மார்பகங்களை மாற்றி அமைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மொஹித் ஜெயின் இது குறித்து கூறுகையில், ’பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண், ஆணாக மாற, தொடர் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும்; அதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அவருக்கு ஆண்களுக்கான ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் ஹார்மான் மாற்று (replacement) சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அப்பெண்னால் எதிர்காலத்தில் கருத்தரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/EpRlVa1
0 Comments