ஆபாச வீடியோ மிரட்டல்: "நீங்கள் தான் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்" - ஆவேசமான ஸ்வப்னா சுரேஷ்

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், இப்போது தினமும் செய்தியாளர்களை சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பேட்டி அளித்து வருகிறார். கடந்த 7-ம் தேதி தொடங்கி தினமும் புதுப்புது தகவலை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே முதல்வர் பினராயி விஜயனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு உண்டு எனக்கூறினார். அதன் பின்னர் தனது 164 பக்க வாக்குமூலத்தை வாபஸ் பெறவேண்டும் என நண்பரான ஷாஜ் கிரண் மூலம் மிரட்டல் பினராயி விஜயன் மிரட்டல் விடுத்ததாக கூறினார். மேலும் அது சம்பந்தமான ஆடியோ ஒன்றையும் ஸ்வப்னா சுரேஷ் நேற்று வெளியிட்டார். அந்த ஆடியோவில் பிலிவெர்ஸ் சர்ச் மூலம் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் ஃபண்ட்களை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றதாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆடியோ விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பிலிவெர்ஸ் சர்ச் சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஷாஜ் கிரண்

ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோ எடிட் செய்யப்பட்டது எனக்கூறிய ஷாஜ் கிரண், ஸ்வப்னாவின் தனிப்பட்ட வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், "ஷாஜ் கிரண் செய்தியாளர்கள் முன்னிலையில் எனது தனிப்பட்ட வீடியோ குறித்து பேசினார்.

அந்தரங்க விஷயங்களைக் கூறித்தான் ஒரு பெண் மீது அதிக தாக்குதல் நடத்துகிறார்கள். எனது பாத்ரூமிலோ, பெட்ரூமிலோ, உடை மாற்றும் அறையிலோ ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்தார்களா என தெரியவில்லை. அப்படி செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்வப்னா சுரேஷ்

அப்படி வீடியோ இருக்கிறது என்றால், நீங்கள் நூறு சதவீதம் சரியானதுதானா என விசாரணை நடத்த வேண்டும். உங்களின் ஒரு சகோதரிக்கு இந்த நிலை வந்திருப்பதாக நினைக்க வேண்டும். உங்கள் சகோதரியாக நினைத்து என்னை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் உண்மை வெளியே வராது. இதெல்லாம் பார்த்துதான் நான் சோர்ந்து போயுள்ளேன்" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/dIwSaTA

Post a Comment

0 Comments