பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, அண்மையில் ஊடக விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி இஸ்லாமியர்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்கண்டில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போரட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் நுபுர் ஷர்மாவைக் கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையின் போது பிரயாக்ராஜில் சில மோட்டார் சைக்கிள் மற்றும் வண்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் ஒரு போலீஸ் வாகனத்தை எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை தடுக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் லத்திகளை பயன்படுத்தி அந்த கும்பலை கலைத்தனர். அப்போது ஒரு போலீஸ் உயர் அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அப்பகுதியில் அமைதி நிலவியது.
இந்தநிலையில், உத்தரபிரதேசம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாகவும், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததற்காகவும் 6 மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/A9Ysn6t
0 Comments