ஜம்மு-காஷ்மீரில் உள்ள பள்ளிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஓரு காஷ்மீர் பண்டிட் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் நேற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் டி.வி நடிகை ஒருவரை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளால் பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்திருக்கின்றனர். 18 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நேற்றும் ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார்.
காஷ்மீர் பண்டிட்டுகள் 18 நாள்களாக தர்ணாவில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், பா.ஜ.க 8 ஆண்டுக்கால ஆட்சியை கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கிறது. பிரதமரே இது திரைப்படம் அல்ல... காஷ்மீரின் இன்றைய யதார்த்த நிலை'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/aCiOXqd
0 Comments